Enable Javscript for better performance
மதுக்கடைகளை மூட வலியுறுத்தி மக்கள் அதிகாரம் சார்பில் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மதுக்கடைகளை மூட வலியுறுத்தி மக்கள் அதிகாரம் சார்பில் ஆர்ப்பாட்டம்

    By மதுரை  |   Published on : 01st September 2015 07:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுக்கடைகளை மூட வலியுறுத்தி மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் மதுரையில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

     அண்ணாநகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநிலத் தலைமைக்குழு உறுப்பினர் சே.வாஞ்சிநாதன் தலைமை வகித்தார். அவர் பேசுகையில், தமிழகத்தில் மதுவிலக்குக்கு எதிராக பெரிய அளவிலான போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. மக்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வே இதற்கு காரணம் என்றார்.

     ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினர் மற்றும் பள்ளி மாணவர்கள் மதுபாட்டில்களை கழுத்தில் மாலையாக அணிந்து நூதன முறையில் போராடினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகம், விவசாயிகள் விடுதலை முன்னணி, ஆதித் தமிழர் பேரவை உள்ளிட்ட அமைப்புகள் கலந்துகொண்டன.

    உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் மு.திருநாவுக்கரசு, மாவட்ட நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கச் செயலர் ஏ.கே.ராமசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகர் மாவட்டச் செயலர் காளிதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநகர் மாவட்டச் செயலர் அன்பழகன், தி.மு.க வழக்குரைஞர் அணி துணை அமைப்பாளர்கள் சசிகுமார், கண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai