Enable Javscript for better performance
மதுரை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற வயதான தம்பதி- Dinamani

சுடச்சுட

    

    மதுரை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற வயதான தம்பதி

    By மதுரை  |   Published on : 01st September 2015 07:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை வயதான தம்பதியினர் தீக்குளிக்க முயன்றனர்.

    மதுரை அவனியாபுரம், வைக்கம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் வி.எஸ்.ராஜா(80) இவரது மனைவி சந்திரா(68). இவர்களுக்கு 4 மகன்கள், 4 மகள்கள் உள்ளனர். இவர்களுக்கு, 1989ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் வழங்கப்பட்ட இலவச வீட்டுமனையில் வீடு கட்டி வசித்து வந்துள்ளனர். ராஜா இரும்பு வியாபாரம் செய்து வந்தார்.

    இவர்களது மூத்த மகன் உதயகுமார் அந்த வீட்டை அபகரிக்க முயற்சி செய்வதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கடந்த ஆண்டு நவம்பரில் மாவட்ட ஆட்சியரிடம் வி.எஸ்.ராஜா மனு ஒன்றை அளித்துள்ளார். ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இந்நிலையில், உதயகுமார் தனது உறவினர்களுடன் சேர்ந்த பெற்றோர் இருவரையும் வீட்டைவிட்டு வெளியேற்றியுள்ளார். இதையடுத்து திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீர் கூட்டத்திற்கு வந்த வி.எஸ்.ராஜா, தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை காட்டி தீக்குளிக்கப் போவதாக கூறினார்.  உடனே அங்கிருந்த காவலர்கள் அவரிடம் இருந்து மண்ணெண்ணெய் பாட்டிலை  வாங்கிக் கொண்டு விசாரித்தனர். 

    தான் அளித்த புகாரை அவனியாபுரம் காவல் நிலையத்தில் ஏற்க மறுத்ததாலும், மகனும், உறவினர்களும் தொடர்ந்து தொந்தரவு செய்வதால் வேறு வழியில்லாமல் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்ததாக போலீஸாரிடம் ராஜா தெரிவித்தார். இதையடுத்து போலீஸார் அவரை தல்லாகுளம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai