Enable Javscript for better performance
10 பேருக்கு போலி பட்டா வழங்கியவர் மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    மதுரை அருகே 10 பேரை ஏமாற்றி பணம் வசூலித்து போலி பட்டாக்களை வழங்கிய நபர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    மதுரை மாவட்டம், சிலைமான் பகுதியைச் சேர்ந்தவர் கதிரேசன். இவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு அப்பகுதியைச் சேர்ந்தவர்களை அணுகி, சக்கிமங்கலத்தில் அரசு இலவச நிலப்பட்டாக்களை வழங்க உள்ளதாகவும் தனக்கு உயர் அதிகாரிகளைத் தெரியும் என்றும் கூறியுள்ளார். அதை நம்பி அவரிடம் 10 பேர் தலா ரூ.10 ஆயிரம் கொடுத்துள்ளனர். இதையடுத்து பட்டா போன்ற ஆவணத்தை அவர்களிடம் கொடுத்துள்ளார். பின்னர் அவை போலியானது என தெரியவந்தது. அவரிடம் பணத்தை திரும்பக் கேட்டபோது, கதிரேசன் அவர்களை மிரட்டியுள்ளார். இதுகுறித்து ஆண்டார் கொட்டாரத்தைச் சேர்ந்த சையது இப்ராகிம் சிலைமான் போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai