Enable Javscript for better performance
இளம் பெண் மர்மச்சாவு: கணவர் மீது புகார்- Dinamani

சுடச்சுட

    

    கருங்காலக்குடி அருகே இளம் பெண் சாவில் சந்தேகம் உள்ளதாகவும், பெண்ணின் கணவரைக் கைதுசெய்யக் கோரியும் பெண்ணின் உறவினர்கள் மேலூரில் சாலை மறியலில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.

     கருங்காலக்குடி அருகே உள்ள தேத்தாம்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி வீரபாண்டி. இவரது மனைவி பாண்டிவிஜயராணி (32). இவர்களுக்கு 10 வயதில் மகனும், 7 வயதில் மகளும் உள்ளனர். இந்நிலையில் பாண்டிவிஜயராணி வாயில் நுரைதள்ளிய நிலையில்  வீட்டில் இறந்துகிடந்தது திங்கள்கிழமை இரவு தெரியவந்தது. அவரது கணவர் வீரபாண்டி தலைமறைவாகிவிட்டார். தகவலறிந்த கொட்டாம்பட்டி போலீஸார் சடலத்தை கைப்பற்றி மேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    வீரபாண்டி குடிபோதையில் விஜயராணியை அடித்துக் கொலைசெய்துவிட்டு, வாயில் விஷம் ஊற்றியிருக்காலம் என பெண்ணின் தாயார் கண்ணாயி போலீஸில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், மேலூர் அரசு மருத்துவமனைக்கு வந்த அவரது உறவினர்கள், வீரபாண்டியை கைதுசெய்ய வலியுறுத்தி மேலூர் பஸ்நிலையம் அருகே சாலைமறியலில் ஈடுபட்டனர். பிரேதப்பரிசோதனை அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாக மேலூர் டி.எஸ்.பி. மங்களேஸ்வரன் உறுதி அளித்தனர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai