Enable Javscript for better performance
காடை,கவுதாரி விற்ற 2 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    மதுரையில் காடை,கவுதாரி பறவைகளை விற்பனை செய்ததாக 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

      மதுரையில் வில்லாபுரம் டாஸ்மாக் கடை அருகே காடை, கவுதாரி பறவைகளை சிலர் கூவிக்கூவி விற்பனை செய்துள்ளனர். இது குறித்து மாவட்ட வனத்துறைக்கு தகவல் தெரியவந்தது. இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் விரைந்து சென்று 2 பேரை பிடித்தனர். விசாரணையில் அவர்களில் ஒருவர் விருதுநகரைச் சேர்ந்த ராமர் (40), மற்றொருவர் வலையங்குளத்தைச் சேர்ந்த ராமு மகன் முருகன் (47) எனத்தெரியவந்தது. இருவரும் கைது செய்யப்பட்டனர். இவ்விருவரும் வைத்திருந்த, 40 பறவைகள் உயிருடனும், 5 பறவைகள் இறந்த நிலையிலும் பறிமுதல் செய்யப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai