Enable Javscript for better performance
துப்புரவுப் பணியாளர் போராட்டம்: பணிகள் முடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    துப்புரவுப் பணியாளர் போராட்டம்: பணிகள் முடக்கம்

    By மதுரை  |   Published on : 02nd September 2015 04:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் போராட்டம் தொடர்வதால் நகர் முழுவதும் துப்புரவு பணிகளில் முடக்கம் ஏற்பட்டுள்ளது.

    ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சியின் சுகாதாரம் மற்றும் பொறியியல் பிரிவு துப்புரவுத் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் திங்கள்கிழமை முதல் ஈடுபட்டுள்ளனர். 

    இதையடுத்து மாநகராட்சி சார்பில் தொழிலாளர்கள் சங்கப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டனர். ஆனால், தொழிலாளர் நலத்துறை ஆணையர் முன்னிலையில் மட்டுமே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம் என தொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைக்கு மறுப்புத் தெரிவித்தனர். இந்தப் போராட்டம் குறித்து மாநகராட்சி ஆணையர் (பொறுப்பு) இ.சாந்தி கூறியதாவது:

      தொழிலாளர்கள் சங்கப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைக்கு உடன்பட மறுக்கின்றனர். இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். ஒப்பந்த பணியாளர்களின் ஊதியம் ரூ.115-லிருந்து ரூ.225 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு ஏப்ரல் மாதத்தில் இருந்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 10 ஆண்டுகள் பணியில் உள்ள தினக்கூலி ஊழியர்கள் 690 பேரை நிரந்தர பணியாளர்களாக நியமனம் செய்வதில் அரசு தான் முடிவெடுக்க வேண்டும். அதில் மாநகராட்சி நிர்வாகம் தலையிட முடியாது. நிரந்தரப் பணியாளர்களுக்கு இலவச வீட்டுமனைகள் அளிப்பதில் இருந்த சில சிக்கல்கள் தீர்க்கப்பட்டு வருகின்றன. விரைவில் அவர்களுக்கு இலவச வீட்டுமனைகள் அளிக்கப்படும். பணியாளர்கள் போராட்டத்தால் தேக்கமடைந்துள்ள பணிகளை போராட்டத்தில் கலந்துகொள்ளாத பணியாளர்கள் மற்றும் மாநகராட்சியின் அம்மா திட்டப் பணியாளர்களைக் கொண்டு நிறைவேற்றி வருகிறோம்  என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai