Enable Javscript for better performance
நான்கு பேரை வெட்டிய வழக்கில்: பெண் உள்பட 6 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    நான்கு பேரை வெட்டிய வழக்கில்: பெண் உள்பட 6 பேர் கைது

    By திருப்பரங்குன்றம்  |   Published on : 02nd September 2015 04:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருப்பரங்குன்றத்தில் இடப்பிரச்னை காரணமாக 4 பேரை வெட்டிய வழக்கில் திருநகர் போலீஸார் 6 பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

    திருப்பரங்குன்றம் தேவிநகரைச் சேர்ந்த செல்லப்பாண்டி மற்றும் மாரிமுத்து இருவருக்கும் இடப்பிரச்னை தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் மாரிமுத்து 20 பேர் கொண்ட கும்பலுடன் செல்லப்பாண்டி, போஸ் உள்ளிட்ட 4 பேரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச்சென்றார். இதுகுறித்து திருநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடிவந்தனர்.

     இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக திருப்பரங்குன்றம் தேவிநகரைச் சேர்ந்த சிவன்காளை மகன் பால்பாண்டி(45), சுப்புராஜ் மகன் லெட்சுமணன்(25), சக்திவேல் மகன் சிவமுருகன்(23), மனோகரன் மகன் பிரபாகரன்(23), சேகர் மகன் கார்த்தி(24), சுப்புராஜ் மனைவி மாயக்காள் ஆகிய 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai