Enable Javscript for better performance
பள்ளி மாணவர்களுக்கான வியத்தகு இயற்கை விழா- Dinamani

சுடச்சுட

    

    டோக் பெருமாட்டி கல்லூரியில் பள்ளி மாணவர்களிடையே அறிவியலை பிரபலப்படுத்தும் நோக்கில் வியத்தகு இயற்கை எனும் தலைப்பில் திறன் சார்ந்த போட்டிகள் நடைபெற்றன.

    டோக் பெருமாட்டி கல்லூரியின் உயிரி தொழில்நுட்பவியல் துறை சார்பில் நடைபெற்ற விழாவுக்கு துறைத் தலைவர் செண்பகராதை தலைமை வகித்தார். இதில் வியத்தகு இயற்கை எனும் தலைப்பில் போட்டிகளும், அறிவியல் சார்ந்த செயல்முறை விளக்கங்களும் அளிக்கப்பட்டன.  தனியார் நிறுவன மேலாளர் நவாஸ் பாபு விழாவை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai