Enable Javscript for better performance
புதுவையில் இருந்து காரில் மதுரை வந்த கல்லீரல்- Dinamani

சுடச்சுட

    

    மும்பையைச் சேர்ந்த 51 வயது பெண்ணுக்கு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.

     மும்பையைச் சேர்ந்த மாயா ஷா என்பவர் கல்லீரல் இழைநார் நோயினால் பாதிப்படைந்து மதுரை கே.கே.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில் புதுச்சேரியைச் சேர்ந்தவர் வி.வேதவள்ளி(68) திங்கள்கிழமை இருசக்கர வாகனத்தில் செல்லும் போது ஏற்பட்ட விபத்தில் படுகாயம் அடைந்தார். அங்குள்ள ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவருடைய மகன் பிரகாசம் வேதவள்ளியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய சம்மதம் தெரிவித்தார். தகவல் அறிந்த மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் ஜிப்மர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று   வேதவள்ளியின் கல்லீரலை காரின் மூலம்  மதுரைக்கு எடுத்து வந்தனர். 

    இந்நிலையில் பள்ளப்பட்டி அருகே சாலை விபத்தில் இறந்த பள்ளிச் சிறுமிக்காக பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டிருந்தனர். பின்னர் காவல் கண்காணிப்பாளர் தலையிட்டு பொதுமக்களிடம் நிலைமையை எடுத்துரைத்த பின்னர் வாகனம் செல்ல பொதுமக்கள் வழிவிட்டனர். இதையடுத்து வாகனம் மருத்துவமனை வளாகத்தை 9.40 மணிக்கு வந்து சேர்ந்தது.

    அறுவை சிகிச்சை முடிந்து மாயாஷா வின் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai