Enable Javscript for better performance
ரயில் மறியல் முயற்சி:   51 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    ரயில்வே பணிகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில் மறியலில் ஈடுபட முயன்ற எஸ்.டி.பி.ஐ கட்சியினர் 51 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

     ஐ.சி.எஃப். மற்றும் தென் மண்டல ரயில்வே துறையில் பயிற்சி முடித்த மாணவர்களுக்கு வேலை வழங்கும் வரை ஆர்.ஆர்.சி. (ரயில்வே ஆள்சேர்ப்பு மையம்) தேர்வை நடத்தக் கூடாது. தனியாருக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ கட்சியினர் மதுரை பாண்டி பஜார் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் அங்கிருந்து ரயில் மறியலுக்காக பேரணியாக சென்ற    51 பேரை போலீஸார் கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai