Enable Javscript for better performance
லாரி மீது கார் மோதல்: மூவர் படுகாயம்- Dinamani

சுடச்சுட

    

    மேலூர்-திருச்சி நான்குவழிச் சாலையில் கொட்டாம்பட்டி அருகே முன்னால் சென்ற லாரி மீது கார் மோதியதில் சென்னையைச் சேர்ந்த மூவர் பலத்த  காயமடைந்தனர்.

    சென்னையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வணிகவரித்துறை அலுவலர்சிவசுப்பிரமணியன் (70).  சிகிச்சைக்காக காரில்  மதுரைக்கு வந்து கொண்டிருந்த போது கருங்காலக்குடி அருகே முன்னால் சென்ற லாரிமீது மோதி சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் இவரது மகன் வீரலட்சுமணன் (43),  கார் ஓட்டுநர் நந்தகோபாலன் ஆகிய மூவரும் பலத்த காயமடைந்தனர். இவர்கள் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். கொட்டாம்பட்டி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai