Enable Javscript for better performance
லாரி மோதி மாணவி சாவு: பொதுமக்கள் சாலைமறியல்- Dinamani

சுடச்சுட

    

    கொட்டாம்பட்டி அருகே பள்ளபட்டியில் பள்ளிக்குச் சென்ற மாணவி லாரி மோதியதில் செவ்வாய்க்கிழமை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

    பள்ளபட்டியை சேர்ந்தவர் விவசாயி ரவிக்குமார். இவரது மகள் லதா (7). இங்குள்ள ஊராட்சி பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்துவந்தார். செவ்வாய்க்கிழமை காலை பள்ளிக்குச் சென்றபோது சாலையைக் கடந்துசென்றார். அப்போது மதுரையிலிருந்து திருச்சி சென்ற லாரி லதா மீது மோதியதில் அதேயிடத்தில் உயிரிழந்தார். லாரி டிரைவர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிவிட்டார்.

    இதையடுத்து பொதுமக்கள், லாரி ஓட்டுநரைக் கைது செய்து, உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி கொட்டாம்பட்டி-திருச்சி நான்கு வழிச்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த மேலூர் டி.எஸ்.பி. மங்களேஸ்வரன், கொட்டாம்பட்டி காவல் ஆய்வாளர் சுப்பிரமணி, மேலூர் காவல் ஆய்வாளர்  முத்து ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியலைக் கைவிடச்செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai