Enable Javscript for better performance
110 விதியின் கீழ் திட்டங்கள் அறிவிப்பு: காரணத்தை முதல்வர் கூற வேண்டும்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்- Dinamani

சுடச்சுட

    

    110 விதியின் கீழ் திட்டங்கள் அறிவிப்பு: காரணத்தை முதல்வர் கூற வேண்டும்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

    By மதுரை  |   Published on : 02nd September 2015 04:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சட்டப் பேரவையில் அனைத்து திட்டங்களையும் 110 விதியின் கீழ்  அறிவிப்பதற்கான காரணத்தை முதல்வர் கூற வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.

     சத்தியமூர்த்தி பவன் முன்னாள் பெண் ஊழியர் வளர்மதி தொடுத்த வழக்கில் நிபந்தனை முன் ஜாமீன் பெற்றுள்ள அவர், மதுரை தல்லாகுளம் காவல்நிலையத்தில் 6 ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை கையெழுத்திட்ட பின் செய்தியாளர்களிடம் கூறியது:

     பொதுமக்களுக்கு அரசு வழங்கும் இலவச பொருள்கள் தரமானதாக இருக்க வேண்டும். அனைத்து திட்டங்களையும் 110 விதியின் கீழ் அறிவிப்பதற்கான காரணத்தை முதல்வர் கூற வேண்டும். பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகளுக்கு தூக்குத் தண்டனை சரியான தீர்வாகும். உணர்ச்சி வசப்பட்டு செய்யப்படும் குற்றங்களுக்கு குறைவான தண்டனை அளிக்கலாம் என்றார்.

     இதையடுத்து, கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு மரியாதை நிமித்தமாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் குஷ்பு கூறியது: 

     தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி புத்துயிர் பெற்றுள்ளது. இதற்கு மக்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வே காரணம்.

     காங்கிரஸ் கட்சி மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை வலுவிழக்கச் செய்யவே இதுபோன்ற தவறான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன.

     கட்சியை விட்டு நீக்கப்பட்ட ஒருவரது தூண்டுதலால் இந்தப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பெரிய குற்றங்கள் புரிந்த அனைவருக்கும் தூக்குத் தண்டனை அவசியம்.  சட்டசபை தேர்தல் வியூகம் குறித்து கட்சித் தலைமைதான் முடிவு செய்யும். தங்கபாலு மற்றும் கார்த்தி சிதம்பரம் குறித்து எவ்வித கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai