Enable Javscript for better performance
சேஷசமுத்திரம் கலவரம்: ஊராட்சித் தலைவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    சேஷசமுத்திரம் கலவரம்: ஊராட்சித் தலைவர் கைது

    By திருக்கோவிலூர்  |   Published on : 03rd September 2015 05:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விழுப்புரம் மாவட்டம், சேஷசமுத்திரம் கிராமத்தில் ஏற்பட்ட கலவரம் தொடர்பான வழக்கில், ஊராட்சித் தலைவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

    சங்கராபுரம் அருகே சேஷசமுத்திரம் கிராமத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி கலவரம் ஏற்பட்டது. இதில் தொடர்புடையதாக 87 பேரை சங்கராபுரம் போலீஸார் ஏற்கெனவே கைது செய்துள்ள நிலையில், மேலும் சிலரைத் தேடி வருகின்றனர். இந்நிலையில், புதன்கிழமை காலை திருக்கோவிலூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் பா.கீதா, சங்கராபுரம் காவல் ஆய்வாளர் செல்வராஜ் ஆகியோர் தலைமையிலான போலீஸார் ரிஷிவந்தியம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, காட்டுஎடையார் கிராமத்தில் தலைமறைவாக இருந்த சேஷசமுத்திரம் ஊராட்சிமன்றத் தலைவர் சுப்பிரமணியனை போலீஸார் கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai