Enable Javscript for better performance
தனியார் பள்ளி ஆசிரியரிடம் கத்திமுனையில் நகை பறிப்பு- Dinamani

சுடச்சுட

    

    தனியார் பள்ளி ஆசிரியரிடம் கத்திமுனையில் நகை பறிப்பு

    By வாடிப்பட்டி  |   Published on : 03rd September 2015 05:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரையில் தனியார் பள்ளி ஆசிரியரிடம் மர்மநபர்கள் கத்திமுனையில் நகை, பணத்தை பறித்துச்சென்றுள்ளனர்.

    மதுரை கே.புதூர் மீனாட்சியம்மாள் நகர் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் முனியசாமி (45). இவர் பரவைப் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியராக உள்ளார். கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி பள்ளி விட்டு வீடு வருவதற்காக பரவை பஸ் நிறுத்தத்தில் நின்றுள்ளார்.  அப்போது அங்கு வந்த மர்மநபர்கள், முனியசாமியை சமயநல்லூர் பகுதியில் இருட்டான இடத்துக்கு அழைத்துச்சென்று 2 பவுன் தங்கச் சங்கிலி, 2 கிராம் மோதிரம், ஏடிஎம் கார்டு, வங்கி புத்தகம், ரூ.2 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றைப் பறித்துள்ளார்.  சமயநல்லூர் போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai