Enable Javscript for better performance
துப்புரவுப்பணியாளர்கள் வேலைநிறுத்தம்: மாநகராட்சி அதிகாரிகள் அவசர ஆலோசனை- Dinamani

சுடச்சுட

    

    துப்புரவுப்பணியாளர்கள் வேலைநிறுத்தம்: மாநகராட்சி அதிகாரிகள் அவசர ஆலோசனை

    By மதுரை  |   Published on : 03rd September 2015 05:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரையில் துப்புரவுப்பணியாளர்களின் வேலைநிறுத்தம் தொடர்வதால், மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.

    ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சியின் சுகாதாரம் மற்றும் துப்புரவுப்பணியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் திங்கள்கிழமை முதல் ஈடுபட்டுள்ளனர். மாநகராட்சி சார்பில் பேச்சுவார்த்தையில் பங்கேற்கவும் தொழிற்சங்க நிர்வாகிகள் மறுத்துவிட்டதாக தெரிகிறது. மூன்றாவது நாளாக போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியது:

    மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தால் ஏற்பட்டுள்ள பணி முடக்கங்களை சீர்படுத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள், வேலைக்குச் செல்ல விரும்பும் சில தொழிலாளர்களை தடுப்பதாகவும், அதைமீறி பணிக்குச் செல்லும் தொழிலாளர்களை தொந்தரவு செய்வதாகவும் புகார் வந்துள்ளது. தேக்கமடைந்துள்ள பணிகளை விரைந்து முடிப்பதற்காக அம்மா திட்ட பணியாளர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர். விரைவில் இதுதொடர்பாக மேயர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai