Enable Javscript for better performance
பள்ளி மாணவரை காரில் கடத்திய மர்மக்கும்பல்- Dinamani

சுடச்சுட

    

    மதுரையில் பள்ளி மாணவரை காரில் கடத்தி விடுவித்துச்சென்ற மர்மக்கும்பலைப் போலீஸார் தேடிவருகின்றனர்.

    மதுரை எஸ்.ஆலங்குளம் பாரதியார் தெருவைச் சேர்ந்த அருண்முருகன் மகன் சபரிவேல் (12). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 6 ஆம் வகுப்பு மாணவர். செவ்வாய்க்கிழமை மாலை பள்ளி விட்டு வீடு திரும்பிய மாணவரை காரில் வந்த 4 பேர் வலுக்கட்டாயமாக ஏற்றிச்சென்றனர்.

    காரில் வைத்து மாணவரின் முகவரியைக் கேட்ட கும்பல் செல்லிடப் பேசியில் யாரிடமோ பேசியுள்ளது. அதன்பின்னர் மாணவரை மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகே இறக்கிவிட்டுச் சென்றது. இதுகுறித்து மாணவரின் உறவினர் முருகேசன் அளித்த புகாரின் பேரில் கூடல்புதூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனர். மாணவரைக் கடத்தி விட்டுவிட்டுச் சென்ற கும்பல் யார் அவர்கள் எதற்காக, யாரைக் கடத்த வந்தார்கள் என்றும் போலீஸார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai