Enable Javscript for better performance
புத்தகங்களைப் படித்தால் மனது ஒருநிலைப்படும்: பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்- Dinamani

சுடச்சுட

    

    புத்தகங்களைப் படித்தால் மனது ஒருநிலைப்படும்: பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்

    By மதுரை  |   Published on : 03rd September 2015 05:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புத்தகங்களைப் படித்தால் மனதை நாம் ஒருநிலைப்படுத்தலாம் என பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் கூறினார்.

     மதுரை புத்தகத்  திருவிழாவில் புதன்கிழமை அவர் ஆற்றிய சிறப்புரை: ஆயகலைகள் அறுபத்து நான்கையும் கற்றுத்தேர்ந்தோர் நம் நாட்டில் அதிகமாக இருந்துள்ளனர். கற்பதாலே கலைகள் கைகூடும். மதுரையின் பெருமைகளில் ஒன்றாக இப்புத்தகத் திருவிழாவும் சேர்ந்திருப்பது பெருமையாகும்.

     புத்தகங்கள் படிக்கப்படும்போது மனதும் ஒருநிலைப்படும். ஐம்புலன்களையும் அடக்கும் ஆற்றல் புத்தகங்களுக்கு உண்டு.

     புராணம், அறநூல் என தமிழின் இலக்கியங்கள் நம்மை மட்டுமல்ல, மேலை நாட்டவரையும் கூட ஈர்ப்பவையாக உள்ளன. மதம் பரப்பவந்த பாதிரியார்கள் கூட தமிழைக் கற்று, அதன் அறத்தை தங்கள் நாட்டுக்கும் மொழி பெயர்த்துக் கொண்டு சென்றுள்ளதிலிருந்தே தமிழ் இலக்கியப் பெருமையை உணரலாம். திருக்குறளில் இல்லாத நல்ல அறக்கருத்துகள் வேறு எங்குமில்லை. தன்னாளுமை, மேலாண்மை என குறளில் அனைத்து துறை கருத்துகளும் உள்ளன. ராஜாஜியின் வியாசர் விருந்தில் கேள்வி-பதில் முறையில் புராணக்கதை உள்ளது.

     கிருபானந்த வாரியார், கூட்டத்தில் பேசும்போது கேள்வி கேட்டு பதில் கூறுவோருக்கு பரிசளிப்பார். தற்போது அவரை கேலி செய்து பேசிவருகிறார்கள். அறிவாளிகளை கேலி செய்யும் நாடு முன்னேறாது.

     அந்தந்த வயதுக்குரிய நல்ல புத்தகங்களை குழந்தைகளுக்கு படிக்க பெற்றோர் அனுமதிக்கவேண்டும். கள ஆய்விலும், மக்கள் வாழ்க்கை அனுபவத்திலுமே புத்தகங்கள் உருவாகின்றன.

    ஆசிரியர்களிடத்திலே உள்ள தனித்திறனையும், அறிவாற்றலையும் மாணவர்கள் உள்வாங்கினாலே முன்னேற்றமடைவர் என்றார். 

    நிகழ்ச்சிக்கு கோ.ஒளிவண்ணன் தலைமை வகித்தார். மக்களவை உறுப்பினர் அன்வர்ராஜா (ராமநாதபுரம்),  பபாசி செயற்குழு உறுப்பினர்கள் ஆலம்சாக்ரடீஸ், பாலாஜிநாதன், தேசியவலிமை வே.சுவாமிநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai