Enable Javscript for better performance
பெண்ணைக் கொன்று நகை கொள்ளை- Dinamani

சுடச்சுட

    

    மதுரையில் புதன்கிழமை பெண்ணைக் கொன்று நகையைக் கொள்ளையடித்த மர்மநபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

      மதுரை பழையகுயவர் பாளையம் சிந்தாமணி சாலைப் பகுதியில் உள்ள செயின்ட்சேவியர் தெருவைச் சேர்ந்தவர் ராஜாராம். நகைத் தொழிலாளி. இவரது மனைவி சூர்யா (59).   இவர்களுக்கு இரு மகன்கள். மூத்த மகன் மனநல சிகிச்சை பெற்றுக் கொண்டே தனியார் பைண்டிங் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இளைய மகனுக்கு திருமணமாகி, அவரும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

      வீட்டில் உள்ள அனைவரும் வேலைக்கு சென்ற நிலையில் புதன்கிழமை பகல் 2 மணியளவில் தனியாக இருந்த சூர்யா மாடியில் கத்திக்குத்து காயங்களுடன் இறந்துகிடந்துள்ளார்.   இதைகண்ட அக்கம்பக்கத்தினர் கீரைத்துறை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் விரைந்து வந்து பார்த்தபோது, சூர்யாவின் உடலில் பல இடங்களில் வெட்டுக்காயமும், கத்திக்குத்து காயமும் இருந்தது. மேலும், அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலிகள், தோடு, 4 வளையல்கள் உள்ளிட்ட சுமார் 15 பவுன் நகைகள் காணாததால், நகைக்காகவே அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

      சம்பவ இடத்துக்கு துணை ஆணையர்கள் சமந்த்ரோஹன்ராஜேந்திரா (சட்டம், ஒழுங்கு), உமையாள் (குற்றம்) ஆகியோர் வந்து விசாரித்தனர். போலீஸ் மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களைச் சேகரித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai