Enable Javscript for better performance
மூதாட்டியிடம் தங்கச்சங்கிலியை பறிக்க முயன்றவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    மூதாட்டியிடம் தங்கச்சங்கிலியை பறிக்க முயன்றவர் கைது

    By மதுரை  |   Published on : 03rd September 2015 05:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருப்பரங்குன்றத்தில் செவ்வாய்க்கிழமை வீட்டுவாசலில் கோலமிட்டுக் கொண்டிருந்த மூதாட்டியிடம் தங்கச்சங்கிலியை பறிக்க முயன்றவரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.

    திருப்பரங்குன்றம் பெரியரத வீதியைச் சேர்ந்தவர் பாண்டி மனைவி புஷ்பம்(70). இவர் செவ்வாய்க்கிழமை காலை வீட்டு வாசலில் கோலமிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர் கைகழுவ தண்ணீர் கேட்டுள்ளார். அருகே உள்ள வாளியில் இருந்து தண்ணீரை எடுத்துக்கொள்ளுமாறு அவரிடம் புஷ்பம் கூறியுள்ளார்.

    அப்போது அந்த நபர் புஷ்பம் கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலியை பறிக்க முயன்றுள்ளார். புஷ்பம் சத்தமிடவே, அப்பகுதியில் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தவர்கள் ஓடிவந்து மர்ம நபரை பிடித்து போலீஸில் ஒப்படைத்துள்ளனர்.

    விசாரணையில் அந்த நபர் திருப்பரங்குன்றம் சாவடித் தெருவைச் சேர்ந்த முத்துச்சாமி மகன் சுரேஸ்கண்ணன்(35) என்பது தெரியவந்ததையடுத்து போலீஸார் அவரை கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai