Enable Javscript for better performance
வேலை உறுதித் திட்டத்தில் முறைகேடு: திட்டஅலுவலர் பணியிடைநீக்கம்- Dinamani

சுடச்சுட

    

    வேலை உறுதித் திட்டத்தில் முறைகேடு: திட்டஅலுவலர் பணியிடைநீக்கம்

    By மேலூர்  |   Published on : 03rd September 2015 05:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் வேலைஉறுதியளிப்புத் திட்டப்பணியில் முறைகேடு செய்ததாக திட்ட அலுவலரை பணியிடைநீக்கம் செய்து வட்டார விரிவாக்க அலுவலர் புதன்கிழமை உத்தரவிட்டார்.

    கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம் பாண்டங்குடி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் கண்மாய் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியின் முறைகேடு நடப்பதாக பாண்டங்குடி கிராமமக்கள் புகார் தெரிவித்தனர். இதுதொடர்பாக, கொட்டாம்பட்டி வட்டார விரிவாக்க அலுவலர் பிலோமீனாள் சவுந்தர்யா விசாரணை நடத்தினார். அதில், முறைகேடு நடைபெற்றது தெரியவந்தது. இதையடுத்து, திட்டஅலுவலர் கல்பனாவை பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai