Enable Javscript for better performance
அடிப்படை வசதிகளின்றி செயல்பட்ட குழந்தைகள் காப்பகம் மூடல்- Dinamani

சுடச்சுட

    

    அடிப்படை வசதிகளின்றி செயல்பட்ட குழந்தைகள் காப்பகம் மூடல்

    By மதுரை  |   Published on : 04th September 2015 06:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அடிப்படை வசதிகள் இன்றி செயல்பட்ட தனியார் குழந்தைகள் காப்பகம் வியாழக்கிழமை மூடப்பட்டது. இங்கிருந்த குழந்தைகள் வெவ்வேறு காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

     மதுரை திருப்பாலை பகுதியில் செயல்பட்டு வந்த இந்த தனியார் காப்பகத்தில் 108 குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வந்தனர். இங்கு 6 வயது முதல் 12 வயது வரையிலான சிறுவர், சிறுமியர் இருந்தனர். அரசால் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகள் பின்பற்றாமலும், சுகாதார வசதிகள் இல்லாமலும் செயல்பட்டு வந்ததால் குறைபாடுகளைச் சரிசெய்யுமாறு ஏற்கெனவே மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியிருந்தது.

     இருப்பினும் குறைபாடுகள் சரிசெய்யாத காரணத்தால், மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் உத்தரவின்பேரில் மேற்படி குழந்தைகள் காப்பகம் வியாழக்கிழமை மூடப்பட்டது. சமூக நல அலுவலர் ஆனந்தவள்ளி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தனசேகர பாண்டியன் மற்றும் போலீஸார் இந்த காப்பகத்தில் இருந்த  குழந்தைகளை வெவ்வேறு 5 காப்பகங்களுக்கு அழைத்துச் சென்று தங்க வைத்தனர்.

    அரசால் நிர்ணயிக்கப்பட்ட விதிகளைப் பின்பற்றப்படாத குழந்தைகள் காப்பகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மதுரை மாவட்டத்தில், 57 பதிவு செய்யப்பட்ட குழந்தைகள் காப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் குறிப்பிட்ட காலகட்டத்தில் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai