Enable Javscript for better performance
அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரி பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    பேரையூர் தாலுகா முருகனேரி பகுதியில் மணல் திருடப்படுவதாக பேரையூர் வட்டாட்சியருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, வட்டாட்சியர் அப்பகுதியில் ரோந்து சென்றார். அப்போது முருகனேரி பகுதியிலிருந்து டிப்பர் லாரி ஒன்று வந்தது. அதனை நிறுத்தி சோதனை செய்த போது, உரிய ஆவணங்கள் இன்றி மணல் கொண்டு செல்வது தெரிய வந்தது.

      அதனைத்தொடர்ந்து அந்த டிப்பர் லாரியை வட்டாட்சியர் சிவராமன் பறிமுதல் செய்தார். மேல் நடவடிக்கைக்காக உசிலம்பட்டி கோட்டாட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai