Enable Javscript for better performance
அன்பின் அவதாரம் சுவாமி சிவானந்தர்: பேராசிரியர் ரா.மோகன்- Dinamani

சுடச்சுட

    

    அன்பின் அவதாரம் சுவாமி சிவானந்தர்: பேராசிரியர் ரா.மோகன்

    By மதுரை  |   Published on : 04th September 2015 05:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அன்பின் அவதாரமாகத் திகழ்ந்தவர் சுவாமி சிவானந்தர் என பேராசிரியர் ரா. மோகன் கூறினார்.

     மதுரையில் தெய்வநெறிக் கழகம் சார்பில் நடந்துவரும் திரிவேணி விழாவில் வியாழக்கிழமை தமிழகம் தந்த தவப்புதல்வர் எனும் தலைப்பில் அவர் பேசியதாவது: திருநெல்வேலி மாவட்டம் பத்தமடையில் பிறந்த சுவாமி சிவானந்தர் மலேயாவில் மருத்துவராகப் பணிபுரிந்தார். பின்னர் இந்தியா திரும்பி ரிஷிகேசத்தில் தவவாழ்வைப் பெற்றார்.

    உடல்நலம் காத்தவர், ஆன்மிகம் மூலம் உள்ள நலம் காத்தார். தூய உள்ளம், தொண்டு மூலம் நூறாண்டு வாழலாம் என வழிகாட்டியவர். ஆங்கிலம், தமிழ் என முன்னூறு நூல்கள் எழுதிய சிவானந்தர் அன்பின் அவதாரம் என்றார்.

     அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயில் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு தெய்வநெறிக்கழகம் தலைவர் சுவாமி சிவானந்த சுந்தரானந்தா தலைமை வகித்தார். அரவிந்த் அன்னை டிரஸ்ட் வி.கே.சபாபதி நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai