Enable Javscript for better performance
அரசு பாலிடெக்னிக் மாணவர்கள் திடீர் சாலைமறியல்- Dinamani

சுடச்சுட

    

    அரசு பாலிடெக்னிக் மாணவர்கள் திடீர் சாலைமறியல்

    By மேலூர்  |   Published on : 04th September 2015 05:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மேலூர் அருகே அம்பலகாரன்பட்டியிலுள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள், பேருந்துகள் நிற்காமல் செல்வதைக் கண்டித்து வியாழக்கிழமை மாலை திடீர் சாலை மறியலில்  ஈடுபட்டனர்.

      மேலூர் - சிவகங்கை சாலையிலுள்ள அரசு பாலிடெக்னிக்கில் 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். காலையும் மாலையும் மதுரையிலிருந்து ஒரு அரசு போக்குவரத்துகழக பேருந்து கல்லூரி வரை வந்துசெல்கிறது. மற்ற பேருந்துகள் நிறுத்தத்தில் நிற்பதில்லை என புகார் தெரிவித்த மாணவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது சிவகங்கையிலிருந்து மேலூர் வந்த பேருந்தின் ஓட்டுநர் மலைச்சாமி, நடத்துநர் அழகுராஜாவு மற்றும் மாணவர்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பேருந்து சேதப்படுத்தப்பட்டது. தகவலறிந்த மேலூர் டி.எஸ்.பி. மங்களேஸ்வரன் மற்றும் போலீஸார் மாணவர்களிடையே பேசி சாலை மறியலைக் கைவிடச் செய்தனர். இதனால் போக்குவரத்து ஒருமணிநேரம் பாதிக்கப்பட்டது.

    இச்சம்பவம் தொடர்பாக நடத்துநர் அளித்த புகாரின் பேரில் 20 மாணவர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai