Enable Javscript for better performance
எல்.ஐ.சி 60 ஆம் ஆண்டு தொடக்கவிழா- Dinamani

சுடச்சுட

    

    திருநகர் எல்.ஐ.சி கிளையில் 60 ஆம் ஆண்டு தொடக்கவிழா நிகழ்ச்சி செவ்வாய்கிழமை நடைபெற்றது.

     நிகழ்ச்சிக்கு முதுநிலை மேலாளர் சங்கரநாராயணன் தலைமை வகித்தார். உதவி மேலாளர் பி.ஜெயமுருகன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக சமூக ஆர்வலர் வ.சண்முகசுந்தரம் பங்கேற்று குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார். திருநகர் வாசகர் வட்ட துணைத்தலைவர் பொன்.மனோகரன், எல்.ஐ.சி முகவர்கள், வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியையொட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.  நிர்வாக அதிகாரி ஸ்ரீநிவாசன் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai