Enable Javscript for better performance
கண்மாய்களில் கிரானைட் கழிவுகள் கிடக்கிறதா? பதிலளிக்க அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    கண்மாய்களில் கிரானைட் கழிவுகள் கிடக்கிறதா? பதிலளிக்க அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    By மதுரை  |   Published on : 04th September 2015 06:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கண்மாய்களில் கிரானைட் கழிவுகள் கிடப்பதாகக் கூறப்படும் புகாருக்கு பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

     மதுரை மாவட்டம் கீழவளவைச் சேர்ந்த தங்கராஜ் இம்மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதன் விவரம்: மதுரை மாவட்டம் கீழவளவு அருகே பல்வேறு கிரானைட் நிறுவனங்களின் கிரானைட் கழிவுகள் வெள்ளை வீரன்குளம், பூதங்குளம், கட்டிசெட்டிகுளம், சிசி கண்மாய், வேடங்குளம், சிறுமாணிக்க குளம் உள்ளிட்ட 12 கண்மாய்கள் மற்றும் குளங்களில் கொட்டப்பட்டுள்ளன. இந்த கழிவுகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

      இதனால் கண்மாய்களில் தேங்கும் நீரின் அளவு குறைந்து பாசனம்  பாதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகளுக்கு மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்க வில்லை.

      எனவே கண்மாய்களில் கிடக்கும் கிரானைட் கழிவுகளை அகற்ற உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.      இம்மனு நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, வி.எஸ்.ரவி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

      மனுவுக்கு பொதுப்பணித் துறைச் செயலர், மதுரை மாவட்ட ஆட்சியர், மாசுக்கட்டுப்பாட்டு வாரியச் செயலர் ஆகியோர் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai