Enable Javscript for better performance
கொலையான மூதாட்டி உடலில் 58 காயங்கள்- Dinamani

சுடச்சுட

    

    மதுரையில் புதன்கிழமை கொலை செய்யப்பட்ட மூதாட்டியின் உடலில் 58 கத்திக்குத்து காயங்கள் இருந்ததாக மருத்துவர்கள் கூறினர்.

     மதுரை பழையகுயவர்பாளையம் செயின்ட்சேவியர் தெருவைச் சேர்ந்த ராஜாராம் மனைவி சூர்யா (59). இவர் வீட்டின் மாடி அறையில் கொலையுண்டு கிடந்தது கண்டறியப்பட்டது.

     கொலையுண்ட சூர்யா அணிந்திருந்த 21 பவுன் நகைகள் காணாமல் போயிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. அவரது சடலம் வியாழக்கிழமை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது உடலில் 58 இடங்களில் காயமிருந்ததாக மருத்துவர்கள் கூறினர்.

    கொலையில் ஒருவரே ஈடுபட்டிருக்கலாம் என்றும், அவரிடமிருந்து தப்பிக்க சூர்யா முயன்றபோது அதிகமாக மர்மநபர் தாக்கியிருக்கலாம் என்றும் போலீஸார் கூறினர். அடிக்கடி வீட்டுக்கு வருவோர், அப்பகுதியில் உள்ள பழைய குற்றவாளிகள் என பலரிடமும் கீரைத்துறை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai