Enable Javscript for better performance
சந்தைக்கு மாடு வாங்க வந்த வியாபாரி கார், பணத்துடன் மாயம்- Dinamani

சுடச்சுட

    

    சந்தைக்கு மாடு வாங்க வந்த வியாபாரி கார், பணத்துடன் மாயம்

    By வாடிப்பட்டி  |   Published on : 04th September 2015 05:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வாடிப்பட்டி சந்தைக்கு மாடு வாங்க வந்த வியாபாரி பணத்துடன் மாயமானது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

      கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டம் காஞ்சவரம் தாலுகா கோரண்டியை சேர்ந்தவர் நூர்முகமது மகள் லைனு (35). இவர் மாட்டு வியாபாரி. இவரிடம் அதே பகுதியை சேர்ந்த சிசு (35). கடந்த 5 ஆண்டுகளாக மேலாளராக வேலை செய்து வந்தார். இவர் ஒவ்வொரு வாரமும் தமிழகத்தில் உள்ள முக்கிய மாட்டுச் சந்தைகளுக்கு சென்று மாடுகளை வாங்கி வருவது வழக்கம்.

     இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மாடுகளை வாங்க வாடிப்பட்டி சந்தைக்கு வந்துள்ளார். அவரிடம் லைனு, தனது காரையும் ரூ.5.30 லட்சம் பணத்தையும் கொடுத்து அனுப்பியுள்ளார். சிசு கம்பத்தை சேர்ந்த ஒச்சாதேவர் மகன் குமார் (40) என்பவரின் லாரியில் தான் மாடுகளை ஏற்றிக் கொண்டு கேரளாவுக்கு செல்வார். ஆனால் இந்த வாரம் அவரை விட வாடகை குறைவாக வேறு ஒரு நபர் வந்ததால் அவரிடம் லோடுகளை ஏற்றிட பேசிக் கொண்டிருந்தார். இத்தகவல் தெரிந்ததும் குமார், சிசுவிடம் தகராறு செய்து இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனராம். அதன்பின் இரண்டு நாள்களாகியும் சிசுவை தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆனால் சிசு கேரளாவுக்கு செல்லவில்லை. என்ன ஆனார் என்பதும் தெரியவில்லை.

        இது குறித்து லைனு கொடுத்த புகாரின் பேரில் வாடிப்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து கார் மற்றும் பணத்துடன் மாயமான மாட்டு வியாபாரியை தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai