Enable Javscript for better performance
செல்லிடப்பேசியால் தகராறு: 3 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தனிச்சியத்தை சேர்ந்தவர் கார்த்திக்ராஜா(35). அதேபகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் மருது. இருவருக்கும் இடையே செல்லிடப்பேசியில் பேசியது குறித்து பிரச்னை ஏற்பட்டது.  அதை தொடர்ந்து கார்த்திக்ராஜாவும் மருதும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

      அப்போது அங்கு வந்த மருதுவின் உறவினர்களும் சேர்ந்த கார்த்திக்ராஜாவை தாக்கினர். இதில் காயமடைந்த கார்த்திக்ராஜா சிகிச்சைக்காக வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

       இதுசம்மந்தமாக அவர் கொடுத்த புகாரின் பேரில் மருது உள்பட 10 பேர் மீது வாடிப்பட்டி போலீஸார்  வழக்கு பதிவு செய்து மருது,ஆறுமுகம், பாலமுருகன் ஆகியோரை கைது செய்தனர். 7 பேரை தேடிவருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai