Enable Javscript for better performance
செல்லிடப் பேசி வழிப்பறி: 2 மாணவர்கள் கைது- Dinamani

சுடச்சுட

    

    மதுரை நாராயணபுரத்தைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணி மகன் சங்கர் (37). இவர் குட்ஷெட் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் உறவினர்களுக்கு அவசரமாகப் பேச வேண்டும் என்று கூறி சங்கரின் செல்லிடப் பேசியை வாங்கியுள்ளனர். உடனடியாக இருவரும் அங்கிருந்து ஓடியுள்ளனர். சங்கர் சத்தமிடவே, அருகில் இருந்தவர்கள் 2 பேரையும் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.

    விசாரணையில் அவர்கள், தனியார் கல்லூரி மாணவர் சிலோன்காலனியைச் சேர்ந்த பாலமுருகன் மகன் வசந்தகுரு, ஐ.டி.ஐ. மாணவர் சண்முகம் மகன் குமரகுரு என்பது விசாரணையில் தெரியவந்தது. திலகர்திடல் போலீஸார் இருவரையும் கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai