Enable Javscript for better performance
தண்டனைக் கைதி சாவு- Dinamani

சுடச்சுட

    

    மதுரை மத்திய சிறையில் தண்டனைக் கைதி உடல்நலக் குறைவால் புதன்கிழமை உயிரிழந்தார்.

     உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் முத்துராமன் (65). இவரை கஞ்சா வழக்கு ஒன்றில் திருச்சி போலீஸார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து முத்துராமனுக்கு 2012ஆம் ஆண்டு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த முத்துராமனுக்கு வாய்ப் புற்று நோய் இருந்துள்ளது. இதற்கு சிகிச்சை பெற்று வந்த இவர் மதுரை சிறைக்கு மாற்றப்பட்டார்.

     கடந்த சில நாள்களுக்கு முன் நோயின் தீவிரம் அதிகரித்ததால் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முத்துராமன் புதன்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து கரிமேடு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai