Enable Javscript for better performance
பக்தி இலக்கியமே பண்பாட்டை வளர்க்கும்: மரபின்மைந்தன் முத்தையா- Dinamani

சுடச்சுட

    

    பக்தி இலக்கியமே பண்பாட்டை வளர்க்கும்: மரபின்மைந்தன் முத்தையா

    By மதுரை  |   Published on : 04th September 2015 05:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பக்தி இலக்கியங்களே பண்பாடு, ஆளுமையை வளர்க்கும் என மரபின் மைந்தன் முத்தையா பேசினார்.

    மதுரை புத்தகத் திருவிழாவில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சமயத்தமிழ் என்ற தலைப்பில் அவர் பேசியது: சங்கத்தமிழ் இலக்கியங்களில் தொடக்கத்தில் சமயப்  பாடல்களே இடம் பெற்றுள்ளன. சமய இலக்கியங்களில் பெரும்பாலும் உலகம் என்ற வார்த்தை அதிகமாக உள்ளன. இதனால் சங்கத் தமிழர்களுக்கு உலகம் தழுவிய தொலைநோக்குப் பார்வை இருந்துள்ளதை அறியலாம்.

      சங்கம் என்ற சொல் புத்தமதத்தில் பயன்படுத்தப்பட்ட பின்னரே, தமிழ் இலக்கியத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இலக்கியச்சுவை அறிந்திருந்தாலே சங்கத்தமிழ் புத்தகங்களின் கருத்தாழத்தை அறிந்துணரமுடியும்.

      கடவுளை வணங்க பக்தி தேவையில்லை. சங்கத் தமிழ் இலக்கியம் தெரிந்திருந்தால் போதுமானது. அந்த அளவுக்கு பக்தியுணர்வுடன் கூடியதாக சங்கத் தமிழ் இலக்கியங்கள் உள்ளன.

      இறைவன் தன்னைத் தமிழில் பாடவே என்னைப் படைத்தான் எனக் கூறும் திருமூலர் மூலமே இதை நாம் உணரலாம். சங்க இலக்கியத்தில் சில தமிழ்ச் சொற்கள் மந்திரம் போல் வாழ்க்கையை நெறிப்படுத்துவதாக உள்ளன.

      ஆன்மிகம் கடல் போன்றது. அதில் மூழ்கிக்குளிக்கலாம். சங்க கால திருமணங்களில் துந்துபி, வெண்சங்கு, சல்லபிபல்லவி, மத்தளம் ஆகிய இசைக்கருவிகள் பயன்படுத்தப்பட்டதை ஆண்டாள் பாடல் மூலம் அறியமுடிகிறது. அந்த இசைக்கருவிகளின் ஒலி துன்பம் தீர்க்கும் மந்திரமாக இருந்ததையும் அறியலாம். சமயப் பாடல்கள் இலக்கியம் மற்றும் தத்துவம் நிறைந்ததாக இருக்கின்றன. சமயத் தமிழின் நீட்சியாகவே பாரதி, அவருக்குப் பின் கண்ணதாசன் ஆகியோரின் பாடல்களும் உள்ளன.  இறைவன் அருட்கடலில் மூழ்கினால் தமிழால் அமுதம் பருகலாம். குழந்தைகளுக்கு சங்கத்தமிழை கற்பித்தால் பண்பாடும், தன்னாளுமையும் வளரும் என்றார்.

        நிகழ்ச்சியில் சங்கத்தமிழ் என்ற தலைப்பில் பேராசிரியை சக்தி ஜோதி பேசியது: சங்க இலக்கியங்கள் காதல், அன்பு, நட்பை வலியுறுத்துகின்றன. மன்னர் முதல் கிராம மக்கள் வரையிலான சமூக அமைப்பின் அனைத்துத் தரப்பினரின் வாழ்க்கை முறையை படம்பிடித்துக் காட்டுவதாக அவை உள்ளன என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai