Enable Javscript for better performance
பேருந்து மோதி விவசாயி சாவு - Dinamani

சுடச்சுட

    

    வாடிப்பட்டி அருகே விராலிப்பட்டியைச் சேர்ந்தவர் பாலன் மகன் செல்வம்(40). விவசாயி. இவர் சம்பவத்தன்று காய்கறி மூட்டையை ஏற்றிக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் நிலக்கோட்டை சந்தைக்கு சென்று கொண்டிருந்தார்.

     அப்போது சாணாம்பட்டி அருகே சென்ற போது திண்டுக்கல்லிலிருந்து மதுரை நோக்கிவந்த தனியார் பேருந்து அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த செல்வம் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து வாடிப்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai