Enable Javscript for better performance
மதுரை மாவட்டத்தில் 17 ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு- Dinamani

சுடச்சுட

    

    மதுரை மாவட்டத்தில் 17 ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு

    By மதுரை  |   Published on : 04th September 2015 05:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழக அரசு வழங்கும் நல்லாசிரியர் விருதுக்கு, மதுரை மாவட்டத்தில் 17 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

     ஆசிரியர் தினத்தையொட்டி ஒவ்வோர் ஆண்டும் சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தமிழக அரசு நல்லாசிரியர் விருதுகளை வழங்கி வருகிறது. சென்னையில் நடைபெறும் ஆசிரியர் தின விழாவில், இந்த விருது வழங்கப்படும்.

     மதுரை மாவட்டத்தில் விருதுக்கு தேர்வான ஆசிரியர்கள் விவரம்:

     சு.ஜெயலெட்சுமி, அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியை, அயன்பாப்பாகுடி. தா.பாலசுப்பிரமணியம், தெற்குவாசல் நாடார் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர், மதுரை. பா.லீலா மனோகரி,  ஓ.சி.பி.எம். பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர், மதுரை. அ.எஸ்தர் எம்மா ஆலிவ், திரு.வி.க. மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர், மதுரை.

     சி.இந்துமதி, அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர், கள்ளிக்குடி.ஜா.விக்டர் தங்கதுரை, இந்து நாடார் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர், கே.சென்னம்பட்டி. ஆர்.அனிதா, எஸ்.டி.எச். ஜெயின் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர், திருப்பாலை. பரமசிவம், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர், தே.கல்லுப்பட்டி.

     கு.மகாலெட்சுமி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர், குட்லாடம்பட்டி. பி.எஸ்.ஆர்.ஏசுதாஸ், அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர், கீழக்குயில்குடி. ரா.சங்கரி, மதுரை முத்து நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர். கே.செல்வகுமரேசன், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர், வீரபாண்டி. ச.சித்ரா, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர், சின்னமாங்குளம். சீ.தேவகி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர், அ.வலையபட்டி. கு.ஆரோக்கியசாமி, ஆர்.சி.தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர், செம்பட்டி. எல்.மதுமதி, நாடார் சரஸ்வதி தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர், உசிலம்பட்டி. கா.ஞானம்மாள், நாச்சியப்ப நாடார் தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர், கூடக்கோவில்.

     நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ள 17 பேருக்கும் அதற்கான சான்றிதழ்களை  முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி வியாழக்கிழமை வழங்கினார். இதைத் தொடர்ந்து  சென்னையில் சனிக்கிழமை நடைபெறும் ஆசிரியர் தினவிழாவில்,  நல்லாசிரியர் விருதுகளை பள்ளிக் கல்வி அமைச்சர் கே.சி.வீரமணி வழங்க உள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai