Enable Javscript for better performance
மாணவரைத் தாக்கிய 4 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    திருப்பரங்குன்றத்தை அடுத்த பசுமலையில் சகமாணவரை கல்லால் தாக்கியதாக 4 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

     திருப்பரங்குன்றம் காட்டுநாயக்கர் தெருவைச் சேர்ந்த முருகன் மகன் மகாலிங்கம்(18). இவர் பசுமலையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படிக்கிறார். அதே கல்லூரியில் படிக்கும் திருமலை வெங்கடேசன் மகாலிங்கத்தின் நண்பராவார். திருமலை வெங்கடேசன் கல்லூரியில் உடன் படிக்கும் மாணவியுடன் பேசிக்கொண்டிருந்தாராம். அப்போது அங்கு வந்த பி.காம் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் மாணவியுடன் பேசுவதை கண்டித்து திருமலை வெங்கடேசனை தாக்க முயன்றனராம். இதனை தட்டிக்கேட்ட மகாலிங்கத்தை இரண்டாம் ஆண்டு மாணவர்கள் கல்லால் தாக்கியதில் அவர் காயமடைந்தார். இதுகுறித்து புகாரின்பேரில் திருப்பரங்குன்றம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து மதுரையைச் சேர்ந்த வினோத், பார்த்திபன், மணிராஜா, நாகார்ஜூன் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai