Enable Javscript for better performance
வேன் டீசல் டேங்கில் சர்க்கரை: தந்தை, மகன் கைது- Dinamani

சுடச்சுட

    

    வேன் டீசல் டேங்கில் சர்க்கரை: தந்தை, மகன் கைது

    By திருப்பரங்குன்றம்  |   Published on : 04th September 2015 03:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநகரை அடுத்த ஹார்விபட்டியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் ராமச்சந்திரன்(24). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அழகுமலை(55) மற்றும் அவரது மகன்கள் கண்ணன்(30), ராமர்(28) ஆகியோருக்கும் இடப்பிரச்னை இருந்து வந்ததாம். இது சம்பந்தமாக கடந்த 20 நாள்களுக்கு முன் இருதரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டு, வழக்குப்பதிவு செய்து திருநகர் போலீஸார் விசாரிக்கின்றனர்.

     இந்நிலையில் ராமச்சந்திரனுக்கு சொந்தமான வேன் புதன்கிழமை பழுதானதாம். வேன் டீசல் டேங்கில் சர்க்கரையை போட்டதால் பழுதானது தெரியவந்தது. இதுகுறித்து ராமச்சந்திரன் புகாரின் பேரில் திருநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து அழகுமலை மற்றும் அவரது மகன் ராமரை கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai