Enable Javscript for better performance
ஸ்ரீவைகுண்டம் அணை பகுதியில் மணல் அள்ள தடை கோரி மனு: அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    ஸ்ரீவைகுண்டம் அணை பகுதியில் மணல் அள்ள தடை கோரி மனு: அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

    By மதுரை  |   Published on : 04th September 2015 05:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஸ்ரீவைகுண்டம் அணை மற்றும் தாமிரவருணி ஆற்றுப் படுகையில் மணல் அள்ளுவதற்குத் தடை கோரும் மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

     தூத்துக்குடி மாவட்டம் தோழப்பன் பண்ணையைச் சேர்ந்த உலகுத் தேவர் தாக்கல் செய்த மனு விவரம்: ஸ்ரீவைகுண்டம் அணையைத் தூர்வார உத்தரவிடக்கோரி ஜோயல் என்பவர் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இதில் சில வழிகாட்டுதல்களுடன் அணையைத் தூர்வார தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட 5 அணைகளைத் தூர்வாரப்போவதாக  தமிழக அரசு தீர்ப்பாயத்தில் தெரிவித்தது. இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் அணை பகுதியில் மணல் அள்ளும் பணி தீவிரமாக நடக்கிறது. அணைக்கு அருகிலுள்ள தோழப்பன் பண்ணை பகுதியிலும் மணல் அள்ளுகின்றனர்.

     அணை பகுதியில் இருக்கும் மணலில் தாது உப்புக்கள் கலந்து இருக்கும். இது நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் இருப்பதற்கு தேவையானது. எனவே மணலை அள்ளினால் அதன் நீர்ப்பிடிப்பு குறையுமே தவிர கூடாது.

    ஆனால் தூர்வார வேண்டும் என்ற பெயரில் மணல் அள்ளுவதே நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றனர். இதற்கு அரசு அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அனைவரும் கூட்டாக உள்ளனர். நான்கு நாள்களில் 2500 யூனிட் மணல் அள்ளப்பட்டுள்ளது. தினசரி 1000 லாரிகளில் மணல் வெளியேற்றப்படுகிறது.

     தாமிரவருணி ஆற்றில் மணல் அள்ள சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கெனவே தடை விதித்துள்ளது. அணைப் பகுதியிலும் ஆற்றிலும் மணல் அள்ளுவதைத் தடுக்க அரசுக்கு கடந்த ஆக. 10 ஆம் தேதி மனு அனுப்பினேன். நடவடிக்கை இல்லை. எனவே ஸ்ரீவைகுண்டம் அணை பகுதி மற்றும் ஆற்றுப் படுகையில் மணல் அள்ளத் தடைவிதிக்க வேண்டும்.

     இம்மனு நீதிபதிகள் எஸ். நாகமுத்து, விஎஸ். ரவி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு தமிழக கனிமம் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர், பொதுப்பணித் துறையின் தாமிரவருணி நீர்ஆதாரப் பிரிவு செயற்பொறியாளர், நெல்லை வனப் பாதுகாவலர், தேசிய பசுமைத் தீர்ப்பாய உறுப்பினர் ஆகியோர் 2 வாரங்களில் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai