Enable Javscript for better performance
500 வளமைய பயிற்றுநர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பணி மாறுதல்: 6 வாரத்தில் முடிவு செய்ய அரசுக்கு உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    500 வளமைய பயிற்றுநர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பணி மாறுதல்: 6 வாரத்தில் முடிவு செய்ய அரசுக்கு உத்தரவு

    By மதுரை  |   Published on : 04th September 2015 06:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நடப்பு ஆண்டில் 500 வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பணி மாறுதல் வழங்க  பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அளித்த பரிந்துரை மீது 6 வாரத்தில் முடிவு செய்து அறிவிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர் எம். ராஜ்குமார் தாக்கல் செய்த மனு:  ஒவ்வொரு ஆண்டும் 500 வட்டார வள மைய பயிற்றுநர்கள் பணி மூப்பு அடிப்படையில் அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள் என 2006 இல் தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் தலா 500 வட்டார வள மைய பயிற்றுநர்கள் அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். ஆனால் 2012-2013 ஆம் ஆண்டில் 115 வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டனர். எனவே, 2012-2013 ஆம் ஆண்டுக்கு 385 பேரையும், 2013-2014 ஆம் ஆண்டுக்கு 500 பேரையும் சேர்த்து மொத்தம் 885 வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்களை அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் 885 வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்களையும் அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக நியமிப்பது குறித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று 2014 டிச.4-இல்  உத்தரவிட்டார்.  இந்த உத்தரவை எதிர்த்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் மேல்முறையீடு செய்தார். இம்மனுவை நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், ஜி.சொக்கலிங்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

    மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: 2015-2016 ஆம் ஆண்டில் 500 ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பணிமூப்பு அடிப்படையில் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாறுதல் வழங்க அரசுக்கு திட்ட அறிக்கை அனுப்பி வைத்துள்ளதாகவும், அரசின் அனுமதியை பெற்ற பின்பு உரிய தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் மனுதாரருக்கு 19.6.2015 கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். இதை பள்க்கல்வித்துறை இயக்குநரும் ஒத்துக்கொண்டுள்ளார். எனவே, பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அரசுக்கு அனுப்பி உள்ள திட்ட அறிக்கை மீது அரசு 6 வாரத்துக்குள் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai