Enable Javscript for better performance
இலவச கால்நடை மருத்துவ முகாம்- Dinamani

சுடச்சுட

    

    உசிலம்பட்டி அருகே கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரி ஊரகவியல் துறை, கருமாத்தூர் கால்நடை மருத்துவமனை, அரைஸ் விரிவாக்கத் துறை மற்றும் ரடார் மையம் இணைந்து நடத்தும் இலவச கால்நடை மருத்துவ முகாம் புள்ளநேரி கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

     முகாமை, வைகை விவசாய சங்கத் தலைவர் வி.ஆர்.முத்துப்பேயாண்டி வரவேற்றார். ஊரகவியல் துறை முனைவர் ஆரோக்கியராஜ் தலைமையில் கல்லூரி முதல்வர் பேசில் சேவியர் தொடக்கி வைத்து பேசினார். ஊராட்சி மன்ற தலைவி பசுபதி தங்கராஜ் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் தேவராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

    முகாமில் கால்நடை மருத்துவர்கள் எஸ்.பி.மலர்க்கண்ணன், பி.ரவிச்சந்திரன் மற்றும் கதிஸ்மாபிரியா ஆகியோர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தார்கள். மொத்தம் 483க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கும் 236 கோழிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.   முகாமின் ஒருங்கிணைப்பாளர் மரியா ஜோசப் மகாலிங்கம், உதவிப் பேராசிரியர் ஜேம்ஸ் வசந்த், எம்.கண்ணன், கே.முனியாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். உழவர் மன்ற தலைவர் சாமித்தேவன் நன்றி கூறினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai