Enable Javscript for better performance
கார்- அரசுப் பேருந்து மோதல்: இளம் பெண் சாவு- Dinamani

சுடச்சுட

    

    கார்- அரசுப் பேருந்து மோதல்: இளம் பெண் சாவு

    By வாடிப்பட்டி  |   Published on : 05th September 2015 05:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை- திண்டுகல் நான்கு வழிச்சாலையில் கரூரில் இருந்து ஒரு கார் மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது வாடிப்பட்டி அருகே ராஜபாளையத்தில் இருந்து திருப்பூர் நோக்கி சென்ற அரசுப் பேருந்தும், காரும் மோதிக் கொண்டன.

    இந்த விபத்தில் காரில் பயணம் செய்த கரூரைச் சேர்ந்த கந்தசாமி (50), அவரது மனைவி மல்லிகா (45), மகள் சரண்யா (29), பேரன் ஆதவன்குமரன் (2), கார் ஓட்டுநர் கண்ணன் (45) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அவர்களை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரண்யா உயிரிழந்தார். இது குறித்து வாடிப்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai