Enable Javscript for better performance
பாஜக கூட்டணியில் சேர ஜி.கே. வாசனுக்கு அழைப்பு- Dinamani

சுடச்சுட

    

    தமாகா தலைவர் ஜி.கே. வாசன், பாஜக கூட்டணியில் சேர வேண்டும் என, இருகரம் கூப்பி வரவேற்பதாக பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் கூறினார்.

    மதுரையில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் கூறியதாவது: 

    இலங்கைக்கு சமீபத்தில் சென்றிருந்தேன். அங்குள்ள தமிழர்களிடம் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அவர்களது நம்பிக்கையை பிரதமர் மோடி நிச்சயம் நிறைவேற்றுவார். இலங்கைத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்க் கூட்டமைப்பு சார்பில் அனுபவம் மிக்க சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராகியுள்ளார்.

    அவர் தனது கடமையை சிறப்பாகச் செய்து தமிழர் உரிமைக்குப் பாடுபடுவார்.

     பாமகவினர் எங்கள் கூட்டணியில் இருக்கிறார்களா இல்லையா என்ற நிலை உள்ளது. பாமகவினர் வேகமாகச் செயல்பட்டு வருகின்றனர். அதே நேரத்தில், தேர்தல் அறிவிக்கப்பட்டதும், அவர்கள் விவேகமாக முடிவெடுப்பார்கள் என்று காத்திருக்கிறோம். நிச்சயம் அவர்கள் பாஜக கூட்டணியிலே இடம் பெறுவார்கள்.

     தேர்தல் கூட்டணி குறித்து தமிழக பாஜக எடுக்கும் முடிவுக்கு கட்சியின் தலைமை சம்மதிக்கும். ஆகவே, தற்போது தொண்டர் கருத்தை கேட்டு வருகிறோம். திமுக, அதிமுக அல்லாத மாற்று அணியை பாஜக அமைக்கும். 

    எதிர்க்கட்சியினர் ஒன்றாகச் சேர்ந்து தேர்தலைச் சந்திப்பது பலத்தை கூடுதலாக்கும். தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நற்குணம் மிக்கவர்; பக்குவமானவர். தேசியத்தை வலுப்படுத்த அவர் பாஜக கூட்டணியில் சேர வேண்டும். அவரை இருகரம் கூப்பி வரவேற்கிறோம்.  பாஜகவினருக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தாய்வீடு போன்றது. குழந்தை நன்றாக இருக்க வேண்டும் என்று தாய் கவலைப்படுவதில் தவறில்லை என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai