Enable Javscript for better performance
போலி பட்டா தயாரித்த தலையாரி உள்பட 7 பேர் மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    போலி பட்டா தயாரித்த தலையாரி உள்பட 7 பேர் மீது வழக்கு

    By பேரையூர்  |   Published on : 05th September 2015 05:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருமங்கலம் அருகே அடுத்தவர் நிலத்துக்கு போலி பட்டா தயாரித்ததுடன் அவரை மிரட்டிய தலையாரி உள்பட 7 பேர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

     திருமங்கலத்தை அடுத்துள்ள சிந்துபட்டி காவல் சரகம் நாட்டாமங்கலத்தைச் சேர்ந்தவர் மாயாண்டி (70). இவரது நிலத்துக்கு அதே ஊரைச் சேர்ந்த பால்பாண்டி மனைவி அரசு என்பவர் போலி பத்திரம் தயாரித்து தனது இடம் எனவும், அதில் வீடு கட்டப் போவதாகவும் கூறியுள்ளார். இதனைத் தட்டிக் கேட்ட மாயாண்டியை அவர் மிரட்டினாராம். இதற்கு தலையாரி கண்ணன் உள்ளிட்ட 6 பேர் உடந்தையாக இருந்தனராம்.  இது குறித்து மாயாண்டி சிந்துபட்டி போலீஸில் கொடுத்த புகாரின் பேரில் தலையாரி கண்ணன், அரசு, அதே கிராமத்தைச் சேர்ந்த செந்தில்பாண்டி, ரேணுகா உள்ளிட்ட 7 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai