Enable Javscript for better performance
மகளுக்கு வரதட்சணை கொடுமை: தாய் தீக்குளிக்க முயற்சி- Dinamani

சுடச்சுட

    

    மகளுக்கு வரதட்சணை கொடுமை: தாய் தீக்குளிக்க முயற்சி

    By உசிலம்பட்டி  |   Published on : 05th September 2015 04:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உசிலம்பட்டி அருகே மகளை வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்த கணவர், மாமியார் மீது நடவடிக்கை எடுக்க கோரி வெள்ளிக்கிழமை தீக்குளிக்க முயன்ற தாயாரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

    உசிலம்பட்டி அருகே மெய்யணம்பட்டியைச் சேர்ந்தவர் தங்கம் இவருடைய மனைவி செல்வி (42). இவர்களின் மகள் ரசிகா. இவருக்கும் தொட்டப்பநாயக்கனூர் அருகே அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த சுந்தன்-சின்னம்மாள் மகன் சுந்தரபாண்டிக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்னர் சுந்தரபாண்டியும், அவரது குடும்பத்தினரும் ரசிகாவை வரதட்சனை கேட்டு சித்ரவதை செய்துள்ளனர். இதையடுத்து தாய் வீட்டுக்கு வந்த ரசிகாவை கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு அவரது கணவர் வீட்டில் விட்டு வந்துள்ளார்.

    இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை மீண்டும் வரதட்சனை கேட்டு ரசிகாவை தாக்கியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த செல்வி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். அங்கிருந்த பணியாளர்கள் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். மேலும், காவல் ஆய்வாளர் துரை சுப்பிரமணியன், சார்பு- ஆய்வாளர் சரவணன் ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai