Enable Javscript for better performance
வீட்டில் பெண்ணைக் கட்டிப் போட்டு 20 பவுன் நகைகள் கொள்ளை- Dinamani

சுடச்சுட

    

    வீட்டில் பெண்ணைக் கட்டிப் போட்டு 20 பவுன் நகைகள் கொள்ளை

    By திருப்பரங்குன்றம்  |   Published on : 05th September 2015 05:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை அருகே தோப்பூரில் வெள்ளிக்கிழமை வீட்டில் தனியாக இருந்த பெண்ணைக் கட்டிப் போட்டு 20 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

    தோப்பூர் தபோவனம் நகரைச் சேர்ந்தவர் கமலதாசன்(35). எலக்ட்ரீசியன். இவரது மனைவி தனலட்சுமி(34). இவர்களது மகன் பிரனவ் (4). கமலதாசன் வெள்ளிக்கிழமை காலை தோட்டத்துக்கு சென்று விட்டார்.

    இந்நிலையில் தனலட்சுமி தனது மகனுடன் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது 4 பேர் வீட்டின் கதவை தட்டினர். கதவை திறந்த தனலட்சுமியிடம் தாங்கள் வாக்காளர் அடையாள அட்டை சரி பார்க்க வந்துள்ளதாக கூறினர். பின்னர் அவர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி வீட்டுக்குள் புகுந்தனர்.

    அங்கு குழந்தை பிரனவ் கழுத்தில் கத்தியை வைத்து தனலட்சுமியை மிரட்டி அவரின் கை, கால்களை கட்டிப் போட்டு விட்டு, வாயையும் துணியால் கட்டினர். பின்பு தனலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் சங்கிலியையும், பீரோவில் இருந்த 13 பவுன் நகைகளையும் கொள்ளையடித்து விட்டு அந்த 4 பேரும் தப்பி ஓடி விட்டனர்.  மதியம் 12.30 மணியளவில் தோட்டத்திலிருந்து கமலதாசன் வீட்டுக்கு வந்த போது மனைவியை கட்டிப் போட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

     இதுகுறித்து அறிந்ததும் அங்கு வந்த போலீஸார் விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு ஊரக காவல் கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதாரி வந்து விசாரித்தார். இதுகுறித்து ஆஸ்டின்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்தனர். அத்துடன் தனிப்படை அமைத்து கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் பெண்ணைக் கட்டிப் போட்டு நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai