Enable Javscript for better performance
அனைத்துத் தரப்பினருக்கும் பயனுள்ள \\\"ஆரோக்கியம்\\\' கண்காட்சி- Dinamani

சுடச்சுட

    

    அனைத்துத் தரப்பினருக்கும் பயனுள்ள "ஆரோக்கியம்' கண்காட்சி

    By மதுரை  |   Published on : 06th September 2015 08:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் தினமணி நடத்தும் ஆரோக்கியம்-இலவச மருத்துவக் கண்காட்சி அனைத்துத் தரப்பினருக்கும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்று கண்காட்சியைப் பார்வையிட்ட பொதுமக்கள் தெரிவித்தனர்.

     எம்.ராஜகோபால் (65), அரசரடி: சில நாள்களாக கால் வலி இருந்து வருகிறது. அதற்கான சிகிச்சை முறை குறித்த அரங்கு கண்காட்சியில் இருப்பதை அறிந்து இங்கு வந்தேன். நல்ல தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் போன்றவற்றை இலவசமாக பார்த்து தெரிந்து கொண்டேன். பொதுமக்களுக்குப் பயன் அளிக்கும் வகையில் உள்ளது.

     எம்.ரேவதி (44), அண்ணாநகர்: உடல் எடை, உயரம் ஆகியவற்றைக் கணக்கிட்டு சராசரிக்கும் அதிகமாக இருப்பின் உடல் எடையை குறைப்பதற்கான ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. உணவு கட்டுப்பாடுகள் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கான அறிவுரைகள் அளிக்கப்படுகிறது. இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மருத்துவச் செலவுகளை காப்பீட்டுத் திட்டத்தில் செய்து கொள்வது குறித்தும், எந்தெந்த வகையான மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் உள்ளன என்பது குறித்தும் பயனுள்ள தகவல்கள் கிடைத்தன.

     ப.சங்கரநாராயணன் (73), கே.கே.நகர்: மதுரையில் எந்தெந்த மருத்துவமனையில் என்னென்ன வசதிகள் உள்ளன என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது. கால், கைகளில் மசாஜ் செய்வதன் மூலம், நரம்புகளைத் தூண்டி, மருந்து, மாத்திரைகள் இல்லாமல் நோய்களை குணமாக்கும் புதிய சிகிச்சை முறையைத் தெரிந்து கொண்டேன். இலவசமாக ஆலோசனையும் வழங்கப்பட்டது.

     பி.செந்தில்ராசி (20), மதுரை: மருத்துவம் தொடர்பான அனைத்து தகவல்களும் கிடைத்தது. நான் படிக்கும் பிபிஏ பாடப் பிரிவில் மருத்துவ மேலாண்மை பாடத்தில் மருத்துவமனைகள், மருத்துவம் சார்ந்த சேவைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். ஒரே இடத்தில் எனது படிப்புக்குத் தேவையான அனைத்து தகவல்களையும் பெற முடிந்தது இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.

     எம்.எஸ்.மணிகண்டன் (35), ரிசர்வ் லைன்: நோய் வரும் முன் அதுகுறித்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய அவசியத்தை இக்கண்காட்சி எடுத்துக் காட்டுகிறது. நெஞ்சு வலி, அதற்கான சிகிச்சை முறைகள், சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் பரிசோதனை செய்து, ஆலோசனைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. மருத்துவம் சார்ந்த பயனுள்ள புத்தகங்களையும் வாங்கியுள்ளேன். இதுபோன்ற வாய்ப்புகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    எஸ்.கெளசல்யா (29), தனியார் செவிலியர் பயிற்சி பள்ளி ஆசிரியை, வாடிப்பட்டி: மதுரையில் உள்ள மருத்துவமனைகளில் என்னென்ன வசதிகள் உள்ளன, எத்தனை பிரிவுகள் உள்ளன என்பதை தெரிந்து கொள்வதற்காக, செவிலியர் பயிற்சிப் பள்ளி மாணவிகளை அழைத்து வந்தோம்.

        நேரடியாக கண்காட்சியில் பங்கேற்றதன் மூலம் மருத்துவம் தொடர்பான தகவல்களை அறிந்து கொண்டனர். அவரவர் உடல்நலம் பேணல் மட்டுமின்றி கல்விக்கும் பயனுள்ளதாக இக் கண்காட்சி இருந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai