Enable Javscript for better performance
கிரானைட் அரசுடைமை வழக்குகள் விசாரணை தள்ளிவைப்பு- Dinamani

சுடச்சுட

    

    கிரானைட் அரசுடைமை வழக்குகள் விசாரணை தள்ளிவைப்பு

    By மேலூர்  |   Published on : 06th September 2015 08:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டுள்ள கிரானைட் கற்களை அரசுடைமையாக்க அனுமதி கோரிய 82 மனுக்கள் மீதான விசாரணை நவ.2ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டன.

     அரசு புறம்போக்கு நிலங்கள், பொதுப்பணித் துறை கண்மாய்கள், ஊருணிகள், கனிம நிறுவனத்தின் மலைப் பாறைகளை சட்ட விரோதமாக வெட்டி எடுத்து தனியார் நிலங்கள், பொதுப்பணித் துறை கண்மாய்களில் பதுக்கி வைத்துள்ள கிரானைட் கற்களை அரசுடைமையாக்கி ஏலத்தில் விட அனுமதி கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் 82 மனுக்கள் தாக்கல் செய்திருந்தார்.

     மேலும், பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனம் மீதான 9 குற்ற வழக்குகள் மற்றும் மதுரா கிரானைட் மீதான ஒரு குற்ற வழக்கு ஆகியவை மீதான விசாரணை மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்ற வழக்குகள் மீது சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை விதித்திருந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. எனவே விசாரணை நடத்த வேண்டும் என அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

     இதை ஏற்றுக் கொண்ட மாஜிஸ்திரேட் கே.வி.மகேந்திரபூபதி, உயர்நீதிமன்ற உத்தரவை தாக்கல் செய்ய அரசு தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை செப்.9ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார். மேலும் கிரானைட் அரசுடைமை கோரிய மனுக்கள் மீதான விசாரணையை நவ.2-ஆம் தேதிக்கு தள்ளி வைத்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai