Enable Javscript for better performance
குடிநீர் இணைப்பில் பொருத்தியிருந்த 17 மின் மோட்டார்கள் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    குடிநீர் இணைப்பில் பொருத்தியிருந்த 17 மின் மோட்டார்கள் பறிமுதல்

    By மதுரை  |   Published on : 06th September 2015 08:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரையில் தாழ்வான பகுதிகளில் உள்ள குடிநீர் குழாய்களில் குறைந்த அழுத்தத்தில் தண்ணீர் வருகிறது.

      இந்நிலையில், குழாய்களில் மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சப்படுவதாகவும், இதன் காரணமாகவே அனைத்துப் பகுதிகளுக்கும் சீரான குடிநீர் விநியோகம் செய்ய இயலாமல் போகிறது என்றும் புகார் எழுந்தது.

       அதிலும் 30 மற்றும் 31 ஆவது வார்டுகளில் நீண்ட காலமாக இப்பிரச்னை இருந்து வருகிறது. இதையடுத்து இவ்விரு வார்டுகளிலும் மாநகராட்சியின் பொறியியல் பிரிவு அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று கடந்த 3 நாள்களாக ஆய்வு செய்தனர். அப்போது, குடிநீர் இணைப்பில் பொருத்தப்பட்டிருந்த 17 மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai