Enable Javscript for better performance
புதிய பேருந்து வழித்தடம்: எம்.பி. துவக்கிவைத்தார்- Dinamani

சுடச்சுட

    

    புதிய பேருந்து வழித்தடம்: எம்.பி. துவக்கிவைத்தார்

    By உசிலம்பட்டி  |   Published on : 06th September 2015 04:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உசிலம்பட்டி பேருந்து நிலையத்திலிருந்து உத்தப்பநாயக்கனூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி வரையிலான புதிய பேருந்து வழித்தடத்தை தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஆர்.பார்த்திபன், உசிலம்பட்டி சட்ட பேரவை உறுப்பினர் பி.வி.கதிரவன் ஆகியோர் கொடியசைத்து சனிக்கிழமை துவக்கி வைத்தனர். 

    உத்தப்பநாயக்கனூர் பாலிடெக்னிக் செல்வதற்கு மாணவ  மாணவிகள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இதனை கருத்தில் கொண்டு தினத்தோறும் காலை 8.30 மணிக்கும் மாலை 4.00 மணிக்கும் புதிய வழித்தடத்தில் பேருந்துகளை இயக்கிவைத்தனர். இதில் வேளாண்மை இயக்குநர் வீரபாண்டியன், மேலாளர் உதயகுமார்,அதிமுக தொகுதி செயலர் நீதிபதி, பார்வர்டு பிளாக் கட்சியின் நகர செயலர் பாஸ்கரபாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai