Enable Javscript for better performance
மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    திருமங்கலம் அடுத்துள்ள மைக்குடி வினோபா நகரிலுள்ள குண்டாற்றில் சிலர் மணல் அள்ளுவதாக தாலுகா காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உதவி ஆய்வாளர் வெங்கடேஸ்வரன் தலைமையில் காவல் துறையினர் அப்பகுதியில்  சோதனை நடத்தியபோது, குண்டாற்றில் டிராக்டரில் மணல் அள்ளிய மைக்குடியை சேர்ந்த முத்துகருப்பனை பிடித்து விசாரித்தனர்.

     அப்போது எந்தவித அனுமதிச் சீட்டும் இல்லாமல் மணல் அள்ளியது தெரிய வரவே டிராக்டரை பறிமுதல் செய்து போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai